சனி, 23 ஜனவரி, 2010
மின்னியல் கழிவுகள் ( Electronic Waste)
முதலில் மின்னியல் கழிவுகள் ( Electronic Waste) பற்றிய எனது அறிவின் குரு திரு.பீ.பார்த்தசாரதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மின்னியல் கழிவுகள் (E-Waste) என்பது உபயோகப்படுத்தப்பட்ட மின்னியல் பொருட்கள் ஆகும். அவை கழிவுகள் நிலைக்கு வரக் காரணம் ஒன்று அவை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்க வேண்டும் அல்லது உற்பத்தியாளரால் கொடுக்கப்பட்ட காலம்( நல்ல நிலையில் இருந்தாலும்) முடிந்திருக்க (Expiry) வேண்டும். மின்னியல் கழிவுகள் நாம் பயன்படுத்தும் போது சாதுவாக இருந்தாலும், அதனை மறுசுழற்சி (Recycle) செய்யும் போது மிக கொடிய நச்சுத் தன்மை( Hazardous) வாய்ந்த பொருட்களை வெளியிடுகிறது. இந்த நச்சு பொருட்கள் (hazards)உயிரினங்களால் உட்கொள்ளப்படும் போது உடலினுள் ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் போன்ற நோய்களை உண்டாக்கும். அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு ( Environmental Protection Agency-EPA ) கணிப்பின்படி,இதுவரை அமெரிக்காவில் விற்றுள்ள மின்னியல் சாதணங்களில் மூன்றில் ஒரு பங்கு செயலிலந்து உபயோகமில்லாமல் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது.அது மட்டும் அல்லாமல் 4.6மில்லியன் டன்கள் மண்ணில் புதைக்கப்பட்டது (Land filled ). மின்னியல் கழிவில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் ஐரோப்பிய நாடுகள் அதை மண்ணில் புதைக்க கூடாது என்று முடிவெடுத்தனர். ஏனென்றால் மண்ணில் புதைக்கப்படும் போது இடத்தை குறைக்க(Volume Reduction ) செய்ய அவை நொறுக்கப்படும்போது (Incineration ) ,அதிலிருந்து வெளிபடும் நச்சுத்தன்மை வாய்ந்த காரியம்( Led ), பாதரசம்( Mercury ), பாஸ்பர் மற்றும் காட்மியம் போன்ற பொருட்கள் காற்றில் கலக்கின்றன.மற்றும் புதைக்கப்பட்டபின் இதில் உள்ள அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் நிலத்தடி நீரில் கலக்கிறது. மின்னியல் கழிவுகளில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் அவை வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது_ செய்யப்படுகின்றன. இதில் மறுசுழற்ச்சிக்காக சைனா,இந்தியா,பகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளுக்குதான்அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை அறிந்த சைனா , இறக்குமதியை தடுக்க 2000ம் ஆண்டில் சட்டம் கொண்டுவந்தது. இருப்பினும் தடுக்கமுடியவில்லை. இன்று உலகின் மின்கழிவுகளை அதிகம் மறுசுழற்சி செய்யும் நாடுகளில் சைனாவுக்குதான் முதலிடம். ஆணால் 1990ம் ஆண்டு வாக்கிலேயே ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டிலேயே மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்களை அமைத்தன. மின்கழிவுகளை பொறுத்தவரை தற்போது மூன்று அடிப்படை கொள்கைகள் உலக நாடுகளால் பின்பற்றப்படுகிறது. அவை 1.குறை( Reduce ) 2.மறு பயன்பாடு(Recovery ) 3.மீள்சுழற்சி(Recycle ). 1.குறை:மின் மற்றும் மின்னியல்(Electrical&Electronics ) சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும்.இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிற்க வேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும். 2.மறு பயன்பாடு: மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரி செய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும். 3. மீள்சுழற்சி: மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிருந்து மூலப் பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும்.அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில் நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும். இப்பொழுது இந்தியாவில் மின்னியல் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் நிறுவணங்கள் தங்கள் இஷ்டம்போல் எந்த கட்டுபாடும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் மின்னியல் கழிவுகளை விற்றுக் கொண்டிருந்தன. இதனால் மிகப்பெரிய சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. எப்படியென்றால் மாசு கட்டுபாட்டு வாரியங்களால் அங்கீகரிக்கப்படாத சாலையோர மறுசுழற்சியாள்ர்கள் (Backyard Recycler ) மின்னியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும்போது, எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் விதிகளை கடைபிடிக்காமலும் செய்வதால் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாலர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் மிக அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. இதையறிந்த நடுவன் மற்றும் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் ( Central and State Pollution Control Boards ) மின்னியல் கழிவுகள் விசயத்தில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் முதல்படி நிறுவணங்கள் தங்கள் கழிவுகளை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவணங்களுக்கு மட்டும் மீள்சுழற்சிக்காக வழங்கவேண்டும். முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மக்கள் தங்களுடைய மின் மற்றும் மின்னியல் கழிவுகளை பொது கழிவுகளில் ( Municipal Waste ) கலக்காமல் தனியாக மறுசுழற்சிக்கு கொடுக்க வேண்டும். அதற்காக இன்னும் சில நாட்களில் மின்னியல் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டிகள் (e-waste bin) தொண்டு நிறுவணங்களின் உதவிகளுடன் அமைக்கப்பட உள்ளது. நண்பர்களே மின்னியல் கழிவுகள் ( Electronic Waste ) பற்றிய உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், என்னால் முடிந்தவரை தீர்க்கிறேன்.
திங்கள், 11 ஜனவரி, 2010
பூமியின் மீது ஏதாவது மோதுவதற்கு வாய்ப்பிருந்தால்?
இந்த கட்டுரை 2012ல் பூமியின் மீது விண்கல் மோதுமா? என்ற கட்டுரைக்கு பதிலாக எழுதுகிறேன். பூமியின் மீது ஏதாவது மோதுவதற்கு வாய்ப்பிருந்தால்?
எப்படி இருந்தாலும் பூவியின் மீது ஏதேனும் விண்கல்லோ மற்ற கோளோ மோத வாய்ப்பிருந்தால் ,அதனுடைய சுற்றுவட்டப்பாதை மற்றும் வேகத்தை கணக்கு வைத்து அது எப்பொழுது ( நாள், நேரம்) புவியை மோதும் என்று தெரிந்துவிடும். இப்பொழுது நம்மிடம் உள்ள விஞ்ஞான அறிவு அடுத்த வருடமே நம்மீது ஏதூம் மோதவிருந்தால் தவிர்த்துவிடலாம்.இப்பொழுது ஒரு விண்கல் மோதவருவதாக வைத்துக்கொள்வோம்.அதை தவிற்பதற்கு உள்ள வழிகளை சொல்கிறேன்.
இந்த மோதலை தவிர்க்க இரண்டு அடிப்படை வழிகள் உள்ளது.ஒன்று அந்த விண்கல்லின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டும் அல்லது நம்முடைய சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டும்.
1. அது புவியை நெருங்குவதை தவிற்க (சுற்றுவட்டப் பாதையை மாற்ற) அந்த விண்கல்லில் அணு குண்டை வைத்து அதை தூரத்திலே அழித்துவிடலாம்.இதே பெரிய கோளாக இருந்தால் அதில் பல இடங்களில் அணு குண்டு வெடித்து அந்த அதிர்ச்சியில் அதன் பாதையை மற்றலாம். இதற்கு முண்ணோட்ட சோதனையை 2008ம் ஆண்டிலேயே நாசா நடத்தி வெற்றி கண்டுவிட்டது.
2. இதே மோதவிருப்பது நம் அணுகுண்டால் சாத்தியமில்லாத மிக மிக பெரிய கோளோ அல்லது ஒரு நட்சத்திரமாக இருந்தால் வேறு வழியில்லை, இந்த இடத்தில் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டும்தான். வேறொன்றும் இல்லை நம் புவியின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டியதுதான். அதற்கு ஒரு வழி உள்ளது.
நம் புவியின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற நம் நிலவில் (சந்திரனில்) பல இடங்களில் ஒரே நேரத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் அந்த அதிர்ச்சியில் புவி நிச்சயம் இடமாறும். ஆணால் பக்கவிளைவுகளாக புவியில் சுனாமி & நிலநடுக்கம் ஏற்படலாம். புவி கொஞ்சமாவது காப்பாற்றபடும்.
இவைகள் என் சொந்த கருத்துக்கள்.உங்கள் கருத்து இருந்தால் கூறவும்.
பொறியாளன் என்பவன் யார்?
பொறியாளன் என்பவன் யார்?
இந்த கேள்வி என் பொறியியல் முதலாம் ஆண்டு முதல் நாள் முதல் வகுப்பில் என் வகுப்பசிரியரால் கேட்கப்பட்டது.எங்களுக்கு பதில் தெரியவில்லை.அவர்"எவன் ஒருவன் தான் பயின்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை தீய வழியில் பயன்படுத்தாமல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன் பெற உபயோகிக்கிறானோ அவனே உண்மையான பொறியாளன்" என்று விளக்கம் அளித்தார். அன்று அதேயே எங்கள் உறுதி மொழியாக எடுத்தோம்.எங்கள் பட்டமளிப்பு விழாவிலும் அதே உறுதி மொழியை எடுத்தோம். இன்று வரை கடைபிடிக்கிறேன்.என்றும் பின்பற்றுவேன்.
எந்த விஞ்ஞானியும் தன்னுடைய கண்டுபிடிப்பு ஆக்கத்துக்கு மட்டும் பயன்பட நினைப்பான். ஐன்ஸ்டின் தன்னுடைய அனுகுண்டு மக்களை அழித்ததை எண்ணியே வருத்தப்பட்டு இறந்தார்.
எனவே இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். வள்ர்ந்து வரும் தொழில் நுட்பங்களை ஆக்கத்துக்கு மட்டும் பயன்படுத்துவோம்.அப்படி நடந்தால் மக்கள் அனைவரும் பொறியாளர்கள் தான். எனது நண்பர்களுக்கும் இதையே வலியுறுத்துகிறேன்.
இந்த கேள்வி என் பொறியியல் முதலாம் ஆண்டு முதல் நாள் முதல் வகுப்பில் என் வகுப்பசிரியரால் கேட்கப்பட்டது.எங்களுக்கு பதில் தெரியவில்லை.அவர்"எவன் ஒருவன் தான் பயின்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை தீய வழியில் பயன்படுத்தாமல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன் பெற உபயோகிக்கிறானோ அவனே உண்மையான பொறியாளன்" என்று விளக்கம் அளித்தார். அன்று அதேயே எங்கள் உறுதி மொழியாக எடுத்தோம்.எங்கள் பட்டமளிப்பு விழாவிலும் அதே உறுதி மொழியை எடுத்தோம். இன்று வரை கடைபிடிக்கிறேன்.என்றும் பின்பற்றுவேன்.
எந்த விஞ்ஞானியும் தன்னுடைய கண்டுபிடிப்பு ஆக்கத்துக்கு மட்டும் பயன்பட நினைப்பான். ஐன்ஸ்டின் தன்னுடைய அனுகுண்டு மக்களை அழித்ததை எண்ணியே வருத்தப்பட்டு இறந்தார்.
எனவே இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். வள்ர்ந்து வரும் தொழில் நுட்பங்களை ஆக்கத்துக்கு மட்டும் பயன்படுத்துவோம்.அப்படி நடந்தால் மக்கள் அனைவரும் பொறியாளர்கள் தான். எனது நண்பர்களுக்கும் இதையே வலியுறுத்துகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)