திங்கள், 11 ஜனவரி, 2010

பொறியாளன் என்பவன் யார்?

பொறியாளன் என்பவன் யார்?
இந்த கேள்வி என் பொறியியல் முதலாம் ஆண்டு முதல் நாள் முதல் வகுப்பில் என் வகுப்பசிரியரால் கேட்கப்பட்டது.எங்களுக்கு பதில் தெரியவில்லை.அவர்"எவன் ஒருவன் தான் பயின்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை தீய வழியில் பயன்படுத்தாமல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன் பெற உபயோகிக்கிறானோ அவனே உண்மையான பொறியாளன்" என்று விளக்கம் அளித்தார். அன்று அதேயே எங்கள் உறுதி மொழியாக எடுத்தோம்.எங்கள் பட்டமளிப்பு விழாவிலும் அதே உறுதி மொழியை எடுத்தோம். இன்று வரை கடைபிடிக்கிறேன்.என்றும் பின்பற்றுவேன்.
எந்த விஞ்ஞானியும் தன்னுடைய கண்டுபிடிப்பு ஆக்கத்துக்கு மட்டும் பயன்பட நினைப்பான். ஐன்ஸ்டின் தன்னுடைய அனுகுண்டு மக்களை அழித்ததை எண்ணியே வருத்தப்பட்டு இறந்தார்.
எனவே இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். வள்ர்ந்து வரும் தொழில் நுட்பங்களை ஆக்கத்துக்கு மட்டும் பயன்படுத்துவோம்.அப்படி நடந்தால் மக்கள் அனைவரும் பொறியாளர்கள் தான். எனது நண்பர்களுக்கும் இதையே வலியுறுத்துகிறேன்.

4 கருத்துகள்:

  1. நல்ல கருத்துகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உயர்ந்த கருத்தும், நோக்கமும் நண்பரே..!!
    எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று..!!

    பதிலளிநீக்கு
  3. /// "எவன் ஒருவன் தான் பயின்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை தீய வழியில் பயன்படுத்தாமல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன் பெற உபயோகிக்கிறானோ அவனே உண்மையான பொறியாளன்" ///

    நேர்மையான கருத்து, வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு