திங்கள், 11 ஜனவரி, 2010

பூமியின் மீது ஏதாவது மோதுவத‌ற்கு வாய்ப்பிருந்தால்?

இந்த கட்டுரை 2012‍ல் பூமியின் மீது விண்கல் மோதுமா? என்ற கட்டுரைக்கு பதிலாக எழுதுகிறேன். பூமியின் மீது ஏதாவது மோதுவத‌ற்கு வாய்ப்பிருந்தால்?
எப்படி இருந்தாலும் பூவியின் மீது ஏதேனும் விண்கல்லோ மற்ற கோளோ மோத வாய்ப்பிருந்தால் ,அதனுடைய சுற்றுவட்டப்பாதை மற்றும் வேகத்தை கண‌க்கு வைத்து அது எப்பொழுது ( நாள், நேரம்) புவியை மோதும் என்று தெரிந்துவிடும். இப்பொழுது நம்மிடம் உள்ள விஞ்ஞான அறிவு அடுத்த வருடமே நம்மீது ஏதூம் மோதவிருந்தால் தவிர்த்துவிடலாம்.இப்பொழுது ஒரு விண்கல் மோத‌வருவதாக வைத்துக்கொள்வோம்.அதை தவிற்பதற்கு உள்ள வ‌ழிகளை சொல்கிறேன்.
இந்த மோதலை தவிர்க்க இரண்டு அடிப்படை வழிகள் உள்ளது.ஒன்று அந்த விண்கல்லின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டும் அல்லது நம்முடைய சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டும்.
1. அது புவியை நெருங்குவதை தவிற்க (சுற்றுவட்டப் பாதையை மாற்ற) அந்த விண்கல்லில் அணு குண்டை வைத்து அதை தூரத்திலே அழித்துவிடலாம்.இதே பெரிய கோளாக இருந்தால் அதில் பல இடங்களில் அணு குண்டு வெடித்து அந்த அதிர்ச்சியில் அதன் பாதையை மற்றலாம். இதற்கு முண்ணோட்ட சோதனையை 2008ம் ஆண்டிலேயே நாசா நடத்தி வெற்றி கண்டுவிட்டது.
2. இதே மோதவிருப்பது நம் அணுகுண்டால் சாத்தியமில்லாத மிக மிக பெரிய கோளோ அல்லது ஒரு நட்சத்திரமாக இருந்தால் வேறு வழியில்லை, இந்த இடத்தில் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டும்தான். வேறொன்றும் இல்லை நம் புவியின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற வேண்டியதுதான். அதற்கு ஒரு வழி உள்ளது.
நம் புவியின் சுற்றுவட்டப் பாதையை மாற்ற நம் நிலவில் (சந்திரனில்) பல இடங்களில் ஒரே நேரத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் அந்த அதிர்ச்சியில் புவி நிச்சயம் இடமாறும். ஆணால் பக்கவிளைவுகளாக புவியில் சுனாமி & நிலநடுக்கம் ஏற்படலாம். புவி கொஞ்சமாவது காப்பாற்றபடும்.

இவைகள் என் சொந்த கருத்துக்கள்.உங்கள் கருத்து இருந்தால் கூற‌வும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக